/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நிழற்கூடத்தை பயன்படுத்த முடியாமல் பயணிகள் அவதி
/
நிழற்கூடத்தை பயன்படுத்த முடியாமல் பயணிகள் அவதி
ADDED : அக் 25, 2025 01:33 AM
நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை அடுத்த கைலாசம்பாளையம் பகுதியில், நிழற்கூடத்தை பயன்படுத்தாமல் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
நாமகிரிப்பேட்டையில் இருந்து ஆர்.புதுப்பட்டி வழியாக, ராசிபுரம் செல்லும் வழியில் வடுகத்தை அடுத்து கைலாசபாளையம் உள்ளது. இங்குள்ள நிழற்கூடம் பயன்படாத வகையில் உள்ளது. சாலை அமைக்கும்போது, நிழற்கூடம் இரண்டு அடி பள்ளத்தில் சென்றுவிட்டது. இதனால் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தண்ணீர் இருப்பதால், செடி, கொடி, புல் முளைத்து மிகவும் புதராக மாறிவிட்டது.
உட்கார அமைக்கப்பட்டிருந்த சிமென்ட் பெஞ்சும் சேதமடைந்துள்ளது. இதனால், பாழடைந்த கட்டடம் போல் தோன்றுவதால், இதை யாரும் பயன்படுத்துவதில்லை. அருகில் உள்ள மரத்தின் நிழலில்தான் நிற்கின்றனர். பள்ளி, அலுவலக நேரத்தில் பஸ்சுக்கு நிற்பவர்கள், மருத்துவமனைக்கு செல்பவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
எனவே, புதிய நிழற்கூடம் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

