/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் பழைய பஸ் ஸ்டாண்டில் கால் கடுக்க காத்திருக்கும் பயணிகள்
/
நாமக்கல் பழைய பஸ் ஸ்டாண்டில் கால் கடுக்க காத்திருக்கும் பயணிகள்
நாமக்கல் பழைய பஸ் ஸ்டாண்டில் கால் கடுக்க காத்திருக்கும் பயணிகள்
நாமக்கல் பழைய பஸ் ஸ்டாண்டில் கால் கடுக்க காத்திருக்கும் பயணிகள்
ADDED : ஜூன் 17, 2025 02:28 AM
நாமக்கல், நாமக்கல் நகரில் இயங்கி வந்த பஸ் ஸ்டாண்டை, கடந்தாண்டு முதலைப்பட்டியில் கட்டப்பட்ட புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. இதில், திருச்சி, துறையூர், சேந்தமங்கலம், மோகனுார் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் மட்டும் நகருக்குள் வந்து பழைய பஸ் ஸ்டாண்டின் வெளியே பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன. அவ்வாறு வந்து செல்லும் பஸ்கள், பழைய பஸ் ஸ்டாண்ட் வளாகத்திற்குள் செல்லாமல் வெளியே அமைக்கப்பட்டுள்ள பயணிகள் நிழற்கூடத்திலேயே இறக்கி ஏற்றி செல்கிறது.
இந்நிலையில், அந்த பயணிகள் நிழற்கூடம் போதிய இடவசதி, இருக்கை வசதியின்றி உள்ளது. அதனால், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும், பக்கத்தில் இருக்கும் நடைபாதை மேம்பால படிக்கட்டுகள், வர்த்தக நிறுவனங்களின் முன் கால்கடுக்க காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, பயணிகள் நலன் கருதி, திருச்சி, சேந்தமங்கலம், துறையூர், மோகனுார் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் மப்சல் பஸ்களை பழைய பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.