/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாநில அளவில் கோகோ போட்டி பாவை இன்ஜி., கல்லுாரி முதலிடம்
/
மாநில அளவில் கோகோ போட்டி பாவை இன்ஜி., கல்லுாரி முதலிடம்
மாநில அளவில் கோகோ போட்டி பாவை இன்ஜி., கல்லுாரி முதலிடம்
மாநில அளவில் கோகோ போட்டி பாவை இன்ஜி., கல்லுாரி முதலிடம்
ADDED : டிச 04, 2024 01:57 AM
மாநில அளவில் கோகோ போட்டி
பாவை இன்ஜி., கல்லுாரி முதலிடம்
நாமக்கல், டிச. ௪-
நாமக்கல், பாச்சல் பாவை பொறியியல் கல்லுாரியில், ஆண்களுக்கான, மாநில அளவிலான கோகோ போட்டி நடந்தது. இதில், அண்ணா பல்கலை உறுப்பு கல்லுாரிகளை சேர்ந்த, 12 அணிகள் பங்கேற்றன. அரையிறுதி போட்டியில், பாவை இன்ஜி., கல்லுாரியும், கே.எஸ்.ஆர்., இன்ஜி., கல்லுாரியும் விளையாடின. இதில், பாவை பொறியியல் கல்லுாரி, 20-15 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. தொடர்ந்து நடந்த இறுதி போட்டியில், பாவை கல்லுாரியும், ஸ்ரீசக்தி இன்ஜி., கல்லுாரியும் விளையாடின. இதில், 20--07 என்ற புள்ளி கணக்கில், பாவை கல்லுாரி வெற்றி பெற்று சாதனை படைத்தது.வெற்றி பெற்ற மாணவர்களை, பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் நடராஜன், தாளாளர் மங்கை நடராஜன் ஆகியோர் பாராட்டினர். நிகழ்ச்சியில், அண்ணா பல்கலை விளையாட்டுத்துறை தலைவர் செந்தில்குமார், செயலாளர் பாலகுமார், பாவை இன்ஜி., கல்லுாரி இயக்குனர் (சேர்க்கை) செந்தில், இயக்குனர் (நிர்வாகம்) ராமசாமி, கல்லுாரி முதல்வர் பிரேம்குமார், உடற்கல்வி இயக்குனர் சந்தானராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.