/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பவித்திரம் ஆட்டுச்சந்தை பொது ஏலம் ரத்து
/
பவித்திரம் ஆட்டுச்சந்தை பொது ஏலம் ரத்து
ADDED : ஜூன் 21, 2024 07:11 AM
எருமப்பட்டி : எருமப்பட்டி யூனியன், பவித்திரத்தில் பழமை வாய்ந்த வாரச்சந்தை உள்ளது.
பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள், ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த சந்தையில் சுங்கம் வசூல் செய்வதற்கான பொது ஏலம் நேற்று மாலை, 3:00 மணிக்கு நடக்க உள்ளதாக பி.டி.ஓ., மகாலட்சுமி அறிவித்திருந்தார். ஆனால், ஏலத்தில் ஒருவர் மட்டுமே பணம் கட்டியிருந்ததால் ஏலம் ரத்து செய்யப்பட்டது. இது குறித்து பி.டி.ஓ., மகாலட்சுமி கூறுகையில்,''பொது ஏலத்தில் கலந்து கொள்ள குறைந்தது இரண்டு பேர் பணம் கட்ட வேண்டும், ஆனால், நேற்று பவித்திரம் சந்தை ஏலத்திற்கு ஒருவர் மட்டுமே பணம் கட்டினார். இதனால் குறைந்த கோரம் இருந்ததால், ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மீண்டும் ஏலம் எப்போது என பின்னர் அறிவிக்கப்படும்,'' என்றார்.இது குறித்து வியாபாரிகள் சிலர் கூறுகையில்,'கடந்த காலங்களில் பவித்திரத்தில் மட்டும் ஆட்டுச்சந்தை இருந்தது. இதனால், ஆடுகள் வரத்து அதிகமாக இருந்ததுடன், வியாபாரிகளும் வந்தனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக செவ்வந்திப்பட்டியில் திங்கட்கிழமை நாளில், தனியார் இடத்தில் சந்தை நடக்கிறது. அங்கு அதிகளவில் ஆடுகள் செல்வதால் பவித்திரம் சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைந்துள்ளது. இதனால், ஏலம் எடுத்தால் நஷ்டம் ஏற்படும் என ஏலத்திற்கு யாரும் வரவில்லை,' என்றனர்.