ADDED : செப் 26, 2026 06:41 AM
பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம்
சுற்றுவட்டாரத்தில், விசைத்தறி முக்கிய தொழிலாக உள்ளது. இங்கு,
20,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு கடைசியாக போடப்பட்ட கூலி உயர்வு ஒப்பந்தம், கடந்த,
2025 மே மாதத்துடன் முடிவடைந்து விட்டது.
ஒப்பந்தம் முடிந்து
ஓராண்டு மேல் ஆகிவிட்ட நிலையில், இன்னும் புதிய கூலி உயர்வு ஒப்பந்தம்
போடப்படவில்லை. இரண்டு முறை நடந்த பேச்சுவார்த்தையில், விசைத்தறி
உரிமையாளர்கள் பங்கேற்கவில்லை. நேற்று மூன்றாவது முறையாக,
குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில் மீண்டும் பேச்சு வார்த்தை
நடந்தது.
அதில், பள்ளிப்பாளையம் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க
நிர்வாகிகளுக்கு, வருவாய்த்துறை அதிகாரிகள் கடிதம் மூலம் அழைப்பு
விடுத்தனர். ஆனால், முன்றாவது முறையாக நடந்த பேச்சு வார்த்தையிலும்,
பள்ளிப்பாளையம் விசைத்தறி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் கலந்து
கொள்ளாமல் தொடர்ந்து புறக்கணித்துள்ளனர்.
