/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காட்டாற்று வெள்ளத்தால் 3 நாளில் நிரம்பிய பழையபாளையம் ஏரி
/
காட்டாற்று வெள்ளத்தால் 3 நாளில் நிரம்பிய பழையபாளையம் ஏரி
காட்டாற்று வெள்ளத்தால் 3 நாளில் நிரம்பிய பழையபாளையம் ஏரி
காட்டாற்று வெள்ளத்தால் 3 நாளில் நிரம்பிய பழையபாளையம் ஏரி
ADDED : டிச 07, 2024 06:57 AM
எருமப்பட்டி: எருமப்பட்டி, பழையபாளையத்தில் சின்ன ஏரி, பெரிய ஏரி என, 2 ஏரிகள் உள்ளன. 150 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ஏரிக்கு, கொல்லிமலையில் மிக கனமழை பெய்யும்போது, காட்டாற்று வெள்ளமாக மாறி காரவள்ளி வழியாகவும், ஏரியின் எதிரே உள்ள வாய்க்கால் வழியாகவும் தண்ணீர் வருவதற்கான நீர்வழிப்பாதை உள்ளது. கடந்த, 2022ல் கொல்லிமலையில் பெய்த கனம-ழையால், இந்த ஏரிக்கு நீர் வந்தது. இதனால், இப்பகுதியில், 750 ஹெக்டேர் விவசாய நிலம் பாசன வசதி பெற்றது.
கடந்தாண்டு, கொல்லிமலையில் போதிய மழையில்லாமல் ஏரிக்கு தண்ணீர் வரவில்லை. கடந்த சில நாட்களாக பெய்த
மழையால், நேற்று ஏரி நிரம்பி வடிகால் மூலம் சின்ன ஏரியிலும், பெரிய ஏரியிலும் தண்ணீர் வெளியேறி துாசூர் ஏரிக்கு
செல்ல துவங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்-ளனர்.* சேந்தமங்கலம் -- அலங்காநத்தம் சாலை, பழையபாளையம் ஏரியில் உள்ள சின்ன ஏரி பகுதியில், தண்ணீர் சாலையில்
வழிந்-தோடி செல்வதை தடுக்க, பல லட்சம் ரூபாய் செலவில் பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் உயரமாக கட்டியதால்,
தண்ணீர் பாலம் வழியாக செல்லாமல் அருகே தாழ்வான பகுதியில் சாலையில் செல்கிறது. இதனால் பல லட்சம் ரூபாய்
வீணானதாக, வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.