sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கிடப்பில் சாலைப்பணி: வாகன ஓட்டிகள் அவதி

/

கிடப்பில் சாலைப்பணி: வாகன ஓட்டிகள் அவதி

கிடப்பில் சாலைப்பணி: வாகன ஓட்டிகள் அவதி

கிடப்பில் சாலைப்பணி: வாகன ஓட்டிகள் அவதி


ADDED : செப் 14, 2025 04:45 AM

Google News

ADDED : செப் 14, 2025 04:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் யூனியன், வேலணம்பாளையம் கிராமத்தில், கடந்த, 2024 செப்., 24ல், பிரதம மந்திரி கிராம சாலைகள் இணைப்பு திட்டத்தில், 97.78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 2.800 கி.மீ., தொலைவிற்கு சாலை அமைக்கும் பணி தொடங்கி-யது. பழைய தார்ச்சாலையை அகற்றி, அதன் மேல் மண் மற்றும் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்ட நிலையில்

மேற்படி பணிகளை தொடராமல் அப்படியே விட்டுவிட்டனர்.இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான மாணவர்கள் பள்ளி, கல்லுாரிகளுக்கு சென்று வருகின்றனர். அதுமட்டுமின்றி, விவசா-யிகள், பொதுமக்கள் அதிகளவில் சாலையை பயன்படுத்தி வரு-கின்றனர். ஜல்லிக்கற்கள் மட்டும் கொட்டப்பட்ட நிலையில் உள்-ளதால் மக்கள் நடக்க முடியாமல் கடும் சிரமத்துக்குள்ளாகி வரு-கின்றனர்.

டூவீலர்களில் செல்வோர், சற்று வேகமாக சென்றால் கூட தவறி கீழே விழுந்து செல்ல வேண்டிய சூழலில் உள்ளனர். ஓராண்டு காலமாக கிடப்பில் போடப்பட்ட சாலைப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us