ADDED : அக் 02, 2024 07:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்: சர்வதேச ஓய்வூதியர், முதியோர் தினத்தை முன்னிட்டு, மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில், நாமக்கல் பூங்கா சாலையில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராமசாமி தலைமை வகித்தார்.
இதில், முதியோருக்கான ரயில் கட்டண சலுகை, 8வது ஊதியக்குழு அமைத்தல், போக்குவரத்து ஊழியர்க-ளுக்கான, 106 மாத பஞ்சப்படியை வழங்குதல், பி.எஸ்.என்.எல்., ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்-பாட்டத்தில், ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.