/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
26ல் ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம்: கலெக்டர்
/
26ல் ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம்: கலெக்டர்
ADDED : டிச 05, 2024 07:24 AM
நாமக்கல்: 'நாமக்கல் மாவட்டத்தில், வரும், 26ல் ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம் நடக்கிறது' என, கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் மாவட்டத்தில், ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும், 26 காலை, 10:00 மணிக்கு, கலெக்டர்
அலுவலகத்தில் நடக்கிறது. கலெக்டர் உமா தலைமை வகிக்கிறார்.கூட்டத்தில், சென்னை, ஓய்வூதிய இயக்குனரக அலுவலர்கள் கலந்துகொள்கின்றனர். நாமக்கல்
மாவட்டத்தில் உள்ள ஓய்வூதி-யர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் தங்களின் ஓய்வூதியம் தொடர்பான குறைகள்
இருந்தால், தேவையான இணைப்புகளோடு, 3 பிரதி-களில் வரும், 12க்கு முன், கலெக்டரின் நேர்முக
உதவியாளருக்கு வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும்.அதில், ஓய்வூதியர்கள் தங்களின் மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் போன்ற விபரங்களை குறிப்பிட
வேண்டும். கோரிக்கை மனுக்களை அனுப்பிய ஓய்வூதியர்கள் தவறாமல், வரும், 26ல் நடக்கும் குறைதீர் கூட்டத்தில்
கலந்துகொண்டு, தங்களது குறை-களை நிவர்த்தி செய்துகொள்ளலாம். இக்குறைதீர் நாள் கூட்டத்தில், வரும், 20 காலை, 11:30 மணிக்கு, நாமக்கல் கலெக்டரின் நேர்முக உதவியாளர்
(கணக்குகள்) முன் நடக்கும் முன் ஆய்வு கூட்டத்தில் துறை அலுவலர்களோடு, நாமக்கல் மாவட்ட ஓய்வூதியர்
சங்க பிரதிநிதிகள் மட்டும் கலந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.