/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் ப.வேலுாரில் மக்கள் குழப்பம்
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் ப.வேலுாரில் மக்கள் குழப்பம்
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் ப.வேலுாரில் மக்கள் குழப்பம்
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் ப.வேலுாரில் மக்கள் குழப்பம்
ADDED : ஆக 09, 2025 01:47 AM
ப.வேலுார், ப.வேலுாரில், 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம் நடக்கும் தேதி, இடம் மாற்றி அறிவிப்பால், பொதுமக்கள் குழப்பமடைந்துள்ளனர்.
நாமக்கல் மேற்கு மாவட்டம், தி.மு.க., சார்பில், ப.வேலுாரில், 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம், வரும், 12ல், ப.வேலுார் பழைய பைபாஸில் உள்ள செல்லாண்டியம்மன் திருமண மண்டபத்தில் நடப்பதாக பிளக்ஸ் பேனர், 'வாட்ஸாப்' மூலம் விளம்பரப்படுத்தினர்.
இந்நிலையில், நேற்று ப.வேலுார் டவுன் பஞ்., சார்பில், வரும், 12ல், 10வது வார்டு முதல், 18வது வார்டு வரை, பழைய பைபாஸ் சாலையில் உள்ள செல்லாண்டியம்மன் திருமண மண்டபத்திலும்; அதை தொடர்ந்து, செப்., 19ல், 1வது வார்டு முதல், 9வது வார்டு வரை, ராஜா திருமண மண்டபத்திலும், 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம் நடப்பதாக, நோட்டீஸ் வழங்கியும், ஒலிப்பெருக்கி மூலமும் அறிவித்தனர்.
ஏற்கனவே, நகர தி.மு.க., அறிவித்த தேதி, இடமும், தற்போது டவுன் பஞ்., நிர்வாகம் சார்பில் அறிவித்த தேதி, இடமும் மாறுபட்டிருப்பதால், பொதுமக்கள் குழப்பமடைந்தனர்.
இதுகுறித்து, ப.வேலுார் டவுன் பஞ்., நிர்வாகத்தினர் கூறியதாவது: நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில், கடந்த, நான்கு நாட்களுக்கு முன் தான், 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம் நடக்கும் தேதி, இடம் குறித்து எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். டவுன் பஞ்., நிர்வாகம் அறிவித்த தேதிகளில் பொதுமக்கள் கலந்துகொண்டு, அனைத்து துறை விண்ணப்பங்களை அளிக்கலாம். சந்தேகம் இருந்தால், டவுன் பஞ்., அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.