/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நீர் நிலைகளுக்கு உபரிநீர் வந்ததால் மக்கள் மகிழ்ச்சி
/
நீர் நிலைகளுக்கு உபரிநீர் வந்ததால் மக்கள் மகிழ்ச்சி
நீர் நிலைகளுக்கு உபரிநீர் வந்ததால் மக்கள் மகிழ்ச்சி
நீர் நிலைகளுக்கு உபரிநீர் வந்ததால் மக்கள் மகிழ்ச்சி
ADDED : ஜூலை 30, 2025 01:29 AM
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில் உள்ளி ஏரி, நீர்தேக்கம் உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு, மேட்டூர் கிழக்குகரை வாய்க்கால் உபரி நீர் வந்துள்ளதால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பள்ளிப்பாளையம், சுற்றுவட்டார பகுதியில், 10 கி.மீ., சுற்றளவுக்கு மேட்டூர் கிழக்கு கரை வாய்க்கால் செல்கிறது. பிரதான வாய்க்காலில் இருந்து, மதகு வழியாக கிளை வாய்க்காலுக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு, விளை நிலங்களுக்கு கடைமடை வரை செல்லும்.
இதன் பிறகு வெளியேறும் உபரி நீர், அருகில் உள்ள நீர் நிலைகளுக்கும் செல்லும்.
பள்ளிப்பாளையம் பகுதி யில் சில்லாங்காடு, மோளகவுண்டம்பாளையம், எளையாம்பாளையம், மாம்பாளையம், எலந்தகுட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஏரி, நீர் தேக்கம், தடுப்பணை உள்ளிட்ட நீர் நிலைகள் உள்ளன. இந்த நீர் நிலைகள் கடந்த ஆறு மாதங்களாக வறண்டு காணப்பட்டன.
இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, மேட்டூர் கிழக்குகரை வாய்க்கால் தண்ணீர் திறக்கப்பட்டது. வாய்க்காலில் வரும் தண்ணீர் வயல்வெளிக்கு சென்று, இதன் பின்பு உபரி நீர், நீர்
நிலைகளுக்கு சென்றது.
உபரி நீர் வரத்து தொடர்ந்து வருவதால், பள்ளிப்பாளையம் பகுதியில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

