/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
உயர்மின் கோபுர விளக்கு எரியாததால் மக்கள் அவதி
/
உயர்மின் கோபுர விளக்கு எரியாததால் மக்கள் அவதி
ADDED : ஆக 26, 2025 01:49 AM
எலச்சிபாளையம், எலச்சிபாளையம் யூனியன், மாணிக்கம்பாளையம் பஸ் ஸ்டாப்பில், ஐந்து ஆண்டுகளுக்கு முன், உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டது. தற்போது இந்த விளக்கு எரியாமல் உள்ளது.
சுற்று வட்டார பகுதியை சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட மக்கள் தினமும் இரவில், மாணிக்கம்பாளையத்தில் உள்ள மளிகை கடைகளுக்கும், மருந்து கடைகளுக்கும், அரசு மருத்துவமனைக்கும் பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்கின்றனர். பஸ் ஸ்டாப்பில் கும்மிருட்டாக உள்ளதால், விஷ ஜந்துக்களாலும், திருடர்களாலும் அசம்பாவிதம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்திலேயே கடந்து செல்கின்றனர். எனவே, எரியாமல் உள்ள உயர்மின் கோபுர விளக்கை விரைந்து சரி செய்ய வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.