ADDED : டிச 22, 2024 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மண்சாலையால் மக்கள் அவஸ்தை
எலச்சிபாளையம், டிச. 22-
எலச்சிபாளையம் ஒன்றியம், சின்னமணலி பஞ்சாயத்திற்குட்பட்ட, பாளையம் அருந்ததியர் தெருவில், 60க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 150க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் குடியிருப்புகள் அருகில் இதுவரை தார்சாலையோ, சிமென்ட் சாலையோ அமைக்கப்படவில்லை. மழைக்காலங்களில் சாலை சேறும், சகதியுமாக உள்ளது. மேலும், வெயில் காலங்களில் பலத்த காற்றடிக்கும்போது அருகிலுள்ள குடியிருப்புகளில் புழுதி புகுந்து குடியிருப்பை நாசம் செய்துவிடுகின்றது. இதனால், மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே, மண்சாலையை சிமென்ட் சாலையாக மாற்ற சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.