/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மகளிர் உரிமை தொகைக்கு பதிவு செய்ய திரண்ட மக்கள்
/
மகளிர் உரிமை தொகைக்கு பதிவு செய்ய திரண்ட மக்கள்
ADDED : ஜூலை 16, 2025 01:31 AM
ராசிபுரம், ராசிபுரத்தில் நடந்த, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில், மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க, மக்கள் கூட்டம் அலைமோதியது.
தமிழகத்தில், கடந்தாண்டு, 'மக்களுடன் முதல்வர்' திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தால் பொதுமக்கள் அதிகம் பயனடைந்தனர். இதையடுத்து இந்தாண்டு, 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற திட்டத்தை, நேற்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து ராசிபுரத்தில் சேலம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முகாம் தொடங்கப்பட்டது. முகாமில், மருத்துவத்துறை, சித்த மருத்துவம், காவல்துறை, தாட்கோ, கூட்டுறவு வங்கிகள், குடும்ப அட்டை பெயர் மாற்றம், இ-சேவை மையம் உள்ளிட்ட பல்வேறு துறையினர் விசாரணை மையத்தை அமைத்திருந்தனர்.
முகாமில் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் உடனடியாக தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு, உதவித்தொகை, மருத்துவ காப்பீடு அட்டை, வருமானம் மற்றும் இருப்பிட சான்று வழங்கப்பட்டது. முக்கியமாக மகளிர் உரிமைத்தொகை பதிவு செய்யும் இடத்தில் பெண்கள் கூட்டம் அலைமோதியது. முகாமை கலெக்டர் துர்கா மூர்த்தி, எம்.பி., ரஜேஸ்குமார், சேர்மன் கவிதா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சங்கர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.