/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பஸ் ஸ்டாண்டில் பேனர்களால் மக்கள் பீதி
/
பஸ் ஸ்டாண்டில் பேனர்களால் மக்கள் பீதி
ADDED : ஏப் 27, 2025 04:01 AM
ராசிபுரம்: ராசிபுரம் பஸ் ஸ்டாண்ட் எதிரே வைக்கப்பட்டுள்ள பேனரால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பொது இடங்களில், சம்பந்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அனுமதியின்றி பிளக்ஸ் பேனர்கள் வைக்க கூடாது என்றும், அவ்வாறு அனுமதி பெற்றாலும், மூன்று நாட்கள் வரை மட்டுமே வைக்க வேண்டும் என, நீதிமன்றம் அறிவுறுத்தியுள்-ளது. ஆனால், அதையும் தாண்டி பல இடங்களில் பொதுமக்க-ளுக்கு இடையூறாக, கட்சிகள், கோவில் பண்டிகை என, பேனர்-களை வைத்து வருகின்றனர்.ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரே பல்வேறு பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அங்கு கீழ் தளத்தில் உள்ள வணிக நிறுவனங்களின் போர்டுகள் மட்டுமின்றி, முதல் தளத்தில் உள்ள வணிக நிறுவனங்களை முழுவதும் மறைத்து பல்வேறு பேனர்களை வைத்துள்ளனர்.
வெளியூர் மற்றும் கிராமத்தில் இருந்து வருபவர்கள் இந்த பேனர்-களால் எந்த கடைக்கு செல்வது என்று தெரியாமல் தவிக்கின்-றனர். மேலும், காற்றடிக்கும்போது, பேனருக்கு கட்டப்பட்டுள்ள சாரம் ஆடுகிறது. இதனால், கீழே நிற்கும் பொதுமக்கள் அலறி அடித்து ஓடும்நிலை ஏற்பட்டுள்ளது.
இதுபோன்ற பேனர்களை அகற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

