/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சிதிலமடைந்த ரேஷன் கடையை மாற்ற மக்கள் வேண்டுகோள்
/
சிதிலமடைந்த ரேஷன் கடையை மாற்ற மக்கள் வேண்டுகோள்
ADDED : நவ 29, 2024 07:38 AM
மல்லசமுத்திரம்: எஸ்.மேட்டுபாளையத்தில், சிதிலமடைந்து காணப்படும் ரேஷன் கடையை இடித்து விட்டு, புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மல்லசமுத்திரம் அருகே, எஸ்.மேட்டுபாளையம் கிராமத்தில், 2000ல் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம், ரூ.1.6லட்சம் மதிப்பீட்டில் பொது ரேஷன் கடை கட்டப்பட்டது. சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந்து வருகின்றனர். வாரத்தில் செவ்வாய், புதன், வெள்ளி, சனி ஆகிய தினங்களில் செயல்பட்டு வருகிறது. தற்சமயம், கட்டடத்தில் ஆங்காங்கே விரிசலடைந்தும், ஒருசில இடங்களில் சிலாப் கற்கள் பெயர்ந்தும் காணப்படுகிறது. எனவே, கட்டடத்தை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்டித்தர சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

