/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஜல்லி கற்கள் பெயர்ந்த சாலையால் மக்கள் அவதி
/
ஜல்லி கற்கள் பெயர்ந்த சாலையால் மக்கள் அவதி
ADDED : மே 18, 2025 05:22 AM
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் யூனியன், இ.புதுப்பாளையம் கிராமத்திற்குட்-பட்ட பவளாத்தா கோவில் முதல் கூத்தாநத்தம் எல்லை வரை, 2 கி.மீ., தொலைவிற்கு சாலை குண்டும், குழியுமாக காணப்பட்-டது.
வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வந்தனர். இதை சரிசெய்யக்கோரி மக்கள் அதிகாரிகளிடத்தில் முறையிட்-டதை அடுத்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மூலம், கடந்த, 2019-20ல், 10 லட்சத்து, 59,516 ரூபாய் மதிப்பீட்டில், சாலை சரிசெய்யும் பணி தொடங்கியது.மண்ணை கொட்டி அதன்மேல் ஜல்லி கற்கள் பரப்பிய நிலையில், பணியை மீண்டும் தொடரவில்லை. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் செல்ல முடியாமல் சிரமப்-படுகின்றனர். எனவே, பாதியில் நின்ற சாலைப்பணிகளை தாரை ஊற்றி விரைந்து முடிக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.