ADDED : அக் 30, 2025 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெண்ணந்துார், ராசிபுரம் துணை மின் நிலையத்தில் இருந்து கட்டனாச்சம்பட்டி, ஆர்.புதுப்பாளையம், கல்லாங்குளம் உள்ளிட்ட கிராமங்களுக்கு மின் சப்ளை செய்யப்படுகிறது.
இந்நிலையில், கட்டனாச்சம்பட்டி, ஆர்.புதுப்பாளையம், கல்லாங்குளம் உள்ளிட்ட பஞ்.,களிலும், சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கிராமங்களிலும், நேற்று இரவு, 7:45 மணி முதல், 9:30 மணி வரை மின் தடை ஏற்பட்டது. தற்போது, ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியில் உள்ளூர் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இந்நிலையில் மின்தடை ஏற்பட்டதால், கிராமத்தினர் கடும் அவதிக்குள்ளாகினர்.

