/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மகளிர் சுய உதவிக்குழு பள்ளியில் கலெக்டர் ஆய்வு
/
மகளிர் சுய உதவிக்குழு பள்ளியில் கலெக்டர் ஆய்வு
ADDED : அக் 30, 2025 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம், முத்துக்காப்பட்டியில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் சமுதாய திறன் பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு மகளிர் குழுக்கள் மூலம் பல்வேறு சிறு தொழில்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மாவட்ட கலெக்டர் துர்கா மூர்த்தி அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கு வைத்திருந்த சணல் பைகளை பார்வையிட்டு, அதுகுறித்து மகளிர் குழு பெண்களிடம் விபரம் கேட்டறிந்தார். மேலும், அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு சீருடை தயாரிக்கும் பணியை பார்வையிட்டார்.

