ADDED : அக் 30, 2025 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெண்ணந்துார், வெண்ணந்துார் டவுன் பஞ்., பகுதியில், நேற்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது.
டி.ஆர்.ஓ., சுமன் தலைமை வகித்தார். நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார் எம்.பி., கலந்துகொண்டு, பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு, 503 பயனாளிகளுக்கு, 53.68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
வெண்ணந்துார் அட்மா குழு தலைவர் துரைசாமி, வெண்ணந்துார் டவுன் பஞ்., தலைவர் ராஜேஷ், ஆர்.டி.ஓ., சாந்தி, தனித்துணை ஆட்சியர் சுந்தர்ராஜன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

