/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
எரியாத மின்விளக்கால் மக்கள் அவதி
/
எரியாத மின்விளக்கால் மக்கள் அவதி
ADDED : ஜூலை 11, 2025 01:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மல்லசமுத்திரம், மல்லசமுத்திரம் யூனியன், மரப்பரை பிரிவு சாலை வழியாக வையப்பமலை, பருத்திப்பள்ளி, தென்னமரத்துபாளையம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு சாலை பிரிந்து செல்கிறது. இப்பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன், கம்பம் அமைக்கப்பட்டு மின்விளக்கு பொருத்தப்பட்டது.
ஆனால் கடந்த சில வாரங்களாக மின்விளக்கு எரியாமல் உள்ளது. இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாமல் உள்ளது. குறிப்பாக, மாலை நேர வகுப்பு
முடித்து செல்லும் மாணவர்கள், பணிமுடித்து செல்லும் பெண்கள் அச்சப்படுகின்றனர்.
எனவே, எரியாமல் உள்ள மின் விளக்கை சரி செய்ய வேண்டும்.