/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நடைபாதை ஆக்கிரமிப்பால் சாலையில் செல்லும் மக்கள்
/
நடைபாதை ஆக்கிரமிப்பால் சாலையில் செல்லும் மக்கள்
ADDED : ஜூன் 26, 2025 01:34 AM
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பாலம் சாலை விரிவுபடுத்தப்பட்டது. இந்த விரிவுபடுத்திய சாலையோரம் பொதுமக்கள் பாதுகாப்பாக நடந்து செல்லும் வகையில், 'பேவர் பிளாக்' கல் பதித்து நடைபாதை அமைக்கப்பட்டது.
இந்த நடைபாதையில் தற்போது, கடைகள், டூவீலர் நிறுத்துவது என, ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் நடைபாதையில் இருந்து விலகி சாலையில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. நடைபாதை அமைத்தும் பயனில்லாமல் உள்ளது. அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் உள்ளதால், நாளுக்குநாள் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. எனவே, ஆக்கிரமிப்பை அகற்றவும், எச்சரிக்கை பலகை வைக்கவும், பள்ளிப்பாளையம் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.