/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க மக்கள் எதிர்ப்பு
/
ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க மக்கள் எதிர்ப்பு
ADDED : அக் 22, 2024 01:07 AM
மல்லசமுத்திரம், அக். 22-
மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்துடன், மங்களம் ஊராட்சியை இணைத்து, இரண்டாம் நிலை நகராட்சியாக மாற்ற, அரசு கருத்துகேட்பு கூட்டம் நடத்தி வருகிறது. அவ்வாறு மங்களம் ஊராட்சியை, மல்லசமுத்திரம் நகராட்சியுடன் இணைத்தால், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் ரத்தாகி விடும். தண்ணீர்வரி, 3 மடங்கு அதிகரிக்கும்.
கிராம ஊராட்சிக்கு மத்திய அரசு அளிக்கும் மானியம் தடைபடும். மக்கள் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு கிடைக்காமல் அதிகாரிகளைதேடி அலைய வேண்டி வரும். சொத்து வரி, தொழில் வரி பலமடங்கு உயரும். அதனால், இந்த திட்டத்தை கைவிட வலியுறுத்தி, நேற்று, மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், ஊராட்சிமன்ற தலைவர் குப்பாயிமாரிமுத்து தலைமையில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சேர்மன் அலமேலு விஜயன், அ.தி.மு.க., கவுன்சிலர் வனிதாராஜன், அ.தி.மு.க., நகர செயலாளர் சுந்தரராஜன் உள்பட, 300க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து பி.டி.ஓ., பாலவிநாயகத்திடம் கோரிக்கை மனு அளித்தனர்.