/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கொல்லிமலையில் மிளகு உற்பத்திக்கான பயிற்சி முகாம்
/
கொல்லிமலையில் மிளகு உற்பத்திக்கான பயிற்சி முகாம்
ADDED : அக் 11, 2024 07:08 AM
சேந்தமங்கலம்: கொல்லிமலையில், விவசாயிகளுக்கான நிலையான மிளகு உற்பத்தி செய்வது குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
கொல்லிமலையில், இந்திய நறுமண பயிர்கள் ஆராய்ச்சி நிலையம் சார்பில், நிலையான மிளகு உற்பத்திக்கான தொழில் நுட்ப பயிற்சி முறைகள் குறித்த பயிற்சி வகுப்பு நடந்தது. இதில் விவசாயிகளுக்கு அதிக லாபம் தரும் ரகங்கள், மண்வள மேலாண்மை முறைகள், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்து, நறுமண பயிர்கள் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் சீனிவாசன், காந்தியண்ணன், லிஜோதாமஸ் ஆகியோர் பேசினர்.மேலும், தோட்டக்கலை துறை சார்பில், கொல்லிமலையில் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள் குறித்து, வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் மணிகண்டன் பேசினார். ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.