/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாவட்டத்தில் 271 பட்டாசு கடைகளுக்கு அனுமதி 78 விண்ணப்பங்கள் தள்ளுபடி
/
மாவட்டத்தில் 271 பட்டாசு கடைகளுக்கு அனுமதி 78 விண்ணப்பங்கள் தள்ளுபடி
மாவட்டத்தில் 271 பட்டாசு கடைகளுக்கு அனுமதி 78 விண்ணப்பங்கள் தள்ளுபடி
மாவட்டத்தில் 271 பட்டாசு கடைகளுக்கு அனுமதி 78 விண்ணப்பங்கள் தள்ளுபடி
ADDED : அக் 29, 2024 07:14 AM
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் முழுவதும், 271 தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க, மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. 78 விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.ஆண்டு தோறும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்படும். இதையடுத்து, தீபாவளி பண்டிகையையொட்டி ஒரு சில நாட்கள் மட்டும் பட்டாசு கடை நடத்திக் கொள்ளலாம். அதன்படி, இந்தாண்டு அதற்கான அனுமதி பெற, கடந்த, நவ., 12ல் மாவட்ட நிர்வாகம் சார்பில், விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையொட்டி தற்காலிக பட்டாசு கடை வைக்க விரும்புவோர், ஆர்வமாக ஆன்லைனில் விண்ணப்பித்தனர். குறிப்பிட்ட தேதி முடிவடைந்த நிலையில், அதிகாரிகள் தற்காலிக பட்டாசு கடைகளுக்கான விண்ணப்பங்களை ஆய்வு
செய்தனர். தற்போது தீபாவளி பண்டிகைக்கு இன்னும், இரண்டு நாட்களே உள்ள நிலையில், தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூறியதாவது:- நாமக்கல் மாவட்டத்தில், தற்காலிக பட்டாசு கடை வைக்க, 371 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். அந்த விண்ணப்பங்களை வருவாய், காவல் மற்றும்
தீயணைப்புத் துறையினர் ஆய்வு செய்தனர். குறிப்பாக கடை வைக்க விண்ணப்பித்துள்ள இடம் பொதுமக்களுக்கு சிரமம் இல்லாத இடமாக இருக்கிறதா, போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் உள்ளதா,
பாதுகாப்பாக இருக்கிறதா என, பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.முடிவில், 274 தற்காலிக பட்டாசு கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 78 விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மீதமுள்ள, 19 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.