/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பேனர்கள் வைப்பதற்கு அனுமதி பெற வேண்டும்
/
பேனர்கள் வைப்பதற்கு அனுமதி பெற வேண்டும்
ADDED : ஆக 23, 2024 05:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்தில் நடந்த கூட்டத்துக்கு, செயல்அலுவலர் மூவேந்திரபாண்டியன் தலைமை வகித்தார். இதில், பா.ம.க.,- தே.மு.தி.க.,- அம்பேத்கர் இயக்கம், கொ.ம.தே.க., உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனர்களை, வரன்முறை படுத்துவது, பேனர் வைப்பதற்கு முன்பாக டவுன் பஞ்., அலுவலகத்தில் முறையாக அனுமதி பெறுவது குறித்து அறிவுறுத்தப்பட்டது. மேலும், நிலுவையிலுள்ள பேனர்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என, செயல் அலுவலர் கேட்டுக்கொண்டார்.