/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியை பார்வையிட மட்டும் அனுமதி
/
ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியை பார்வையிட மட்டும் அனுமதி
ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியை பார்வையிட மட்டும் அனுமதி
ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியை பார்வையிட மட்டும் அனுமதி
ADDED : டிச 11, 2024 06:54 AM
சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டத்தின் சுற்றுலா தலமான கொல்லிமலையில், மாசிலா அருவி, நம்மருவி, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி உள்ளிட்ட அருவிகளில், 'பெஞ்சல்' புயல் காரணமாக தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால், அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. பின், கடந்த, 7ல் மாசிலா அருவி, நம்மருவியில் தண்ணீர் குறைந்ததால், சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு காரணமாக, சுற்றுலா பயணிகள் பார்வையிடவும், குளிக்கவும் வனத்துறையினர் தடை விதித்திருந்தனர். தற்போது, அருவியில் கொட்டும் தண்ணீரின் வேகம் குறைந்ததால், சுற்றுலா வரும் பயணிகள், 1,300 படிக்கட்டுகளில் இறங்கி, 160 அடி உயரத்தில் ஆர்ப்பரித்து கொட்டும் அருவியை பார்வையிட மட்டும் வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.