ADDED : ஜூன் 17, 2025 02:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல், ராசிபுரம் அருகே உள்ள புறம்போக்கு நிலத்தில், இலவச வீட்டுமனை வழங்கக்கோரி, முத்துக்காளிப்பட்டி ஆதிதிராவிடர் தெரு மக்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
முத்துக்காளிப்பட்டி, ஆதிதிராவிடர் தெருவில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு சொந்த வீடோ, நிலமோ இல்லை. ஒரு சில குடும்பத்தில், கூட்டு குடும்பமாக வசித்து வருகிறோம். அதனால் எங்களுக்கு மிகவும் நெருக்கடியாக உள்ளது. எனவே, ராசிபுரம் தாலுகாவுக்குட்பட்ட ஏ.டி.சி., டிப்போ அருகில் உள்ள, 10 ஏக்கர் புறம்போக்கு நிலத்தில், ஏழை மக்களாகிய எங்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.