/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு மனு
/
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு மனு
ADDED : நவ 18, 2025 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல், 'எருமப்பட்டி, பொன்னேரி கைகாட்டியில், 2026 ஜன., 18ல், ஜல்லிக்கட்டு விழா நடத்த அனுமதி அளிக்க வேண்டும்' என, ஜல்லிக்கட்டு விழாக்குழு சார்பில், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
தை பொங்கலை முன்னிட்டு, தமிழரின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு விழா நடத்த, நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம், பொன்னேரி கைகாட்டியில், 2026 ஜன., 18ல், ஊர் பொதுமக்கள் சார்பில் ஏற்பாடு செய்து வருகிறோம். இதற்காக, இருவரின் பட்டா இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதனால், ஜல்லிக்கட்டு விழா நடத்த அனுமதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

