/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வருமான சான்றிதழில் ரூ.1 லட்சம் கோரி மனு
/
வருமான சான்றிதழில் ரூ.1 லட்சம் கோரி மனு
ADDED : ஆக 26, 2025 12:59 AM
நாமக்கல், 'ஊரக திறனாய்வு தேர்வு எழுதும் மாணவர்கள் நாமக்கல் கலெக்டரிடம் அளித்த மனு:
அரசு மேல்நிலை பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ஹர்ஷா, வருண், சபிதா, திவாகர், பூஜா, அம்பிரிதா ஆகிய நாங்கள், எர்ணாபுரம் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறோம். எங்களது பெற்றோர், தினக்கூலி வேலை செய்து வருகின்றனர்.
மேலும், வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கும் எங்களுக்கு, அரசு தரப்பில் வழங்கப்பட்ட வருமான சான்றிதழில், ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, பள்ளிகளில் நடக்கும் ஊரக திறனாய்வு தேர்வு எழுதும் மாணவ, மாணவியர், குடும்ப வருமான சான்றிதழில், ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் இருந்தால் மட்டுமே ஊரக தேர்வில் பங்கேற்று பலன் அடைய முடியும் என தெரிவிக்கப்பட்டது. நாங்கள் ஊரக தேர்வில் பங்கேற்றும் வகையில் எங்களது பெற்றோர்களின் வருமானச் சான்றிதழ் ஒரு லட்சம் ரூபாய்க்கும் கீழ் திருத்தம் செய்து தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.