/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
துாய்மை பணியாளர்கள் பட்டா கேட்டு மனு
/
துாய்மை பணியாளர்கள் பட்டா கேட்டு மனு
ADDED : செப் 03, 2025 02:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம் பள்ளிப்பாளையம், ஆவாரங்காடு பகுதியில் உள்ள நகராட்சி மண்டபத்தில், நேற்று, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடந்தது. அமைச்சர் மதிவேந்தன், மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, மனுக்களை பெற்றார். அப்போது, பள்ளிப்பாளையம் நகராட்சி துாய்மை பணியாளர்கள், வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்தனர்.
பள்ளிப்பாளையம் நகராட்சி துாய்மை பணியாளர்கள் கூறுகையில், 'பள்ளிப்பாளையம் நகராட்சியில் பல ஆண்டாக, துாய்மை பணியாளர்களாக, 24 பேர் பணிபுரிந்து வருகிறோம். எங்களுக்கு வீட்டுமனை பட்டா கேட்டு அமைச்சரிடம், நேற்று மனு கொடுத்தோம். மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்' என்றனர்.