/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
30 ஆண்டாக வசித்துவரும் வீட்டிற்கு பெயர் மாற்றத்துடன் பட்டா வழங்க கோரி மனு

ADDED : டிச 17, 2024 01:47 AM
நாமக்கல், டிச. 17-
'முப்பது ஆண்டுகளாக அனுபவித்து வரும் வீடுகளை எங்களது பெயருக்கு மாற்றி பட்டா வழங்க வேண்டும்' என, மாவட்ட கலெக்டர் உமாவிடம், எருமப்பட்டி, சிலோன் காலனி மக்கள் மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
சேந்தமங்கலம் தாலுகா, எருமப்பட்டி, கைகாட்டி பகுதியில் அமைந்துள்ள அகத்தியர் காலனி எனும் சிலோன் காலனியில், 176 வீடுகள் உள்ளன. அது, 1976ல் சிரிமா ஒப்பந்தப்படி இந்தியாவுக்கு வந்தவர்களுக்காக கட்டப்பட்டது. அப்போது வேலை இல்லாத காரணத்தால், அவர்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று விட்டனர்.
அந்த வீடு கட்டிய ஒப்பந்ததாரர், அப்பகுதியில் வசித்து வந்த ஏழை கூலித்தொழிலாளர்களான எங்களுக்கு குறிப்பிட்ட தொகையை பெற்றுக்கொண்டு, ஓராண்டு காலத்திற்கு போகியத்திற்கு எழுதி கொடுத்து எங்களை குடியமர்த்தினார். அதில் நாங்கள் குடும்பத்துடன், 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். மேலும், எங்களுக்கு வீடு கொடுத்தவர் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. எனவே இந்த வீடுகளை எங்கள் பெயருக்கு மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.