/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சோமேஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தை சீரமைக்க பொது கணக்கு குழுவிடம் மனு
/
சோமேஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தை சீரமைக்க பொது கணக்கு குழுவிடம் மனு
சோமேஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தை சீரமைக்க பொது கணக்கு குழுவிடம் மனு
சோமேஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தை சீரமைக்க பொது கணக்கு குழுவிடம் மனு
ADDED : செப் 26, 2024 02:19 AM
நாமக்கல்: 'சேந்தமங்கலத்தில் உள்ள சவுந்தரவல்லி அம்பாள் உடனுறை சோமேஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, நாமக்கல் மேற்கு மாவட்ட காங்., பொறுப்பாளர்
பாலாஜி, தமிழக சட்டசபை பொது கணக்குக் குழு தலைவர் செல்வப்பெருந்தகையிடம் மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:சேந்தமங்கலம் டவுன் பஞ்சாயத்தில் பிரசித்தி பெற்ற நைனா-மலை வரதராஜ பெருமாள் வகையறா திருக்கோவிலான சவுந்தர-வல்லி அம்பாள் உடனுறை சோமேஸ்வரர் மற்றும் லட்சுமி நாரா-யண
பெருமாள் கோவில் அமைந்துள்ளன. சேந்தமங்கலம் டவுன் பஞ்., 10வது வார்டில், சிவாலயம் அருகில் அமைந்துள்ள தெப்பக்-குளம், 10 ஆண்டுகளுக்கு மேல், மிகவும் சுகாதார சீர்கேடுடன், நோய் பரப்பும்
வகையில் உள்ளது.உப கோவில்களின் முதன்மையான உற்சவமாகிய மாசிமக திருத்தேர் விழாவின் போது, மாசி மாத பவுர்ணமி அன்று திரு-மண வைபவம் முடிந்தவுடன், குதிரை வாகனத்தில் சிவபெ-ருமான் மற்றும்
வரதராஜ பெருமாள் ஆகிய தெய்வங்கள், இந்த தெப்பக்குளம் அருகே எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.தற்போது, டவுன் பஞ்., கழிவுநீர், நேரடியாக தெப்பக்குளத்தில் கலப்பதால், தெப்பக்குளம் மிகவும் பாழ்பட்டு உள்ளது. சீரழிந்த தெப்பக்குளத்தை, மத்திய, மாநில அரசு மூலம், தேவையான நிதியை
முழுமையாக ஒதுக்கி, படித்துறை, பூங்கா, இதர அடிப்-படை கட்டமைப்புகளுடன் தெப்பக்குளத்தை விரைந்து சீர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்-டுள்ளது.