/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆக்கிரமிப்பை அகற்ற மனு: அதிகாரிகள் நடவடிக்கை
/
ஆக்கிரமிப்பை அகற்ற மனு: அதிகாரிகள் நடவடிக்கை
ADDED : மார் 05, 2024 12:07 PM
நாமகிரிப்பேட்டை: நமகிரிப்பேட்டை, பட்டறை மேடு, ஆசாரித்தெருவை சேர்ந்தவர் பெரியாகவுண்டர் மனைவி அத்தாயி, 80. கணவரை இழந்த இவர், சந்தைகளுக்கு சென்று வெங்காயம் விற்று வருகிறார். ஆசாரித்தெருவில் கடைசி வீட்டில் வசித்து வருகிறார். முன் பகுதியில் இருப்பவர்கள் செடி, தண்ணீர் டேங்க் வைத்திருப்பதால், இவர் வீட்டிற்கு ஆட்டோ செல்ல முடிவதில்லை என்றும், வயதான காலத்தில் மிகவும் பாதிக்கப்படுவதாகவும் கலெக்டரிடம் மனு கொடுத்தார்.
கலெக்டர் உமா, இதுகுறித்து உடனடியாக விசாரிக்க உத்தரவிட்டார். இதையடுத்து, நேற்று வி.ஏ.ஓ., கோபி, டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் ஆறுமுகம் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் உடனடியாக அகற்ற எச்சரிக்கை விடுத்தனர்.

