/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பொன் வரதராஜ பெருமாள் கோவிலில் பழமையான மரங்களை வெட்டியவர் மீது நடவடிக்கை எடுக்க மனு
/
பொன் வரதராஜ பெருமாள் கோவிலில் பழமையான மரங்களை வெட்டியவர் மீது நடவடிக்கை எடுக்க மனு
பொன் வரதராஜ பெருமாள் கோவிலில் பழமையான மரங்களை வெட்டியவர் மீது நடவடிக்கை எடுக்க மனு
பொன் வரதராஜ பெருமாள் கோவிலில் பழமையான மரங்களை வெட்டியவர் மீது நடவடிக்கை எடுக்க மனு
ADDED : ஜன 09, 2024 11:11 AM
நாமக்கல்: 'ராசிபுரம் பொன் வரதாஜ பெருமாள் கோவில் வளாகத்தில் இருந்த அத்திமரம், வன்னிமரம் மற்றும் வில்வ மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பொன் வரதராஜ
பெருமாள் கோவில் பாதுகாப்பு குழுவினர், நாமக்கல்
கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
ராசிபுரம் நகராட்சிக்குட்பட்ட, 17வது வார்டு மேட்டுத்தெருவில், பிரசித்தி பெற்ற பொன் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் அருகே, 50 ஆண்டு பழமையான, மருத்துவ குணம் மற்றும் பாரம்பரியம் மிக்க, 50 அடி உயரம் கொண்ட அத்திமரம் இருந்தது. மேலும், கோவில் முன்புறம் அரசு நிலத்தில், 40 ஆண்டுகளுக்கு முன், ஊர் பொதுமக்கள் சார்பில், அரிய வகையும், மருத்துவ குணம் கொண்ட வன்னிமரம் மற்றும் வில்வமரங்கள் நடப்பட்டு, வளர்த்து வந்தனர்.
இந்நிலையில், 2023 டிச., 31ல், அத்திமரம், வன்னிமரம், வில்வம் மரங்களை துண்டு துண்டாக வெட்டி விட்டனர். மரங்களை வெட்டுவதை அறிந்த பொதுமக்கள் திரண்டு வந்து, தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து, இதுகுறித்து, ராசிபுரம் போலீசார் மற்றும் வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த வருவாய் துறையினர் ஆய்வு செய்தனர். மரங்களை வெட்டியவர்களை பொதுமக்கள் பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ராசிபுரம் நகர மக்கள் மற்றும் பக்தர்கள் வணங்கி பாதுகாத்து வந்த பசுமையான அத்திமரம், வன்னிமரம், வில்வ மரங்களை வெட்டிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.