/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சிறப்பு பயிற்றுனர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க முதல்வருக்கு மனு
/
சிறப்பு பயிற்றுனர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க முதல்வருக்கு மனு
சிறப்பு பயிற்றுனர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க முதல்வருக்கு மனு
சிறப்பு பயிற்றுனர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க முதல்வருக்கு மனு
ADDED : ஜூலை 20, 2025 07:52 AM
நாமக்கல்: 'தமிழகத்தில் சிறப்பு பயிற்றுனர்களை, பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்' என, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்கள் சங்கத்தினர், தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக பள்ளிக்கல்வித்துறையில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தில் உள்ளடக்கிய கல்வி கூறின் வழியாக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல், பிளஸ் 2 வரை, 1.32 லட்சம் மாற்றுத்திறன் மாணவர்கள் பயின்று வருகின்றனர். மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கல்வி அளிக்க சிறப்பு கல்வியியல் பட்டம் மற்றும் பட்டையம் படித்த, 1,600 சிறப்பு பயிற்றுனர்கள் வழியாக, கல்வி பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றோம்.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தில் பணிபுரிந்து வரும் அனைத்து தொகுப்பூதிய பணியாளர்களுக்கும், ஐந்து சதவீதம் ஊதியம் உயர்த்தி வழங்கி, கடந்த, 11ல், செயல்முறை வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், அனைத்துநிலை பணியாளர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கியபோதும், உள்ளடங்கிய கல்வி பணியாளார்களுக்கு மட்டும் விடுபட்டுள்ளது.
நீதிமன்ற ஆணை அடிப்படையில், தொழிலாளர் வைப்பு நிதி பிடித்தம் செய்ய சென்னை, தஞ்சை ஆகிய மாவட்டங்களுக்கு உத்தரவிட்ட நிலையில், மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்க தாமதிக்கப்பட்டு வருகிறது.
மாற்றுத்திறன் சிறப்பு பயிற்றுனர்களுக்கு ஊர்திப்படி, எட்டு மாவட்டங்களில் வழங்கப்பட்டு வருகிறது. அவற்றை அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்க வேண்டும். உச்சநீதிமன்ற ஆணை தீர்ப்பின் அடிப்படையில், நாடு முழுவதும் சிறப்பு பயிற்றுனர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டு வருகின்றனர்.
அதுபோல், தமிழகத்திலும் சிறப்பு பயிற்றுனர்களை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தில் பணி செய்துவரும் எங்களையும், பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.