/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை ஒத்தி வைக்கக்கோரி கலெக்டரிடம் மனு
/
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை ஒத்தி வைக்கக்கோரி கலெக்டரிடம் மனு
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை ஒத்தி வைக்கக்கோரி கலெக்டரிடம் மனு
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை ஒத்தி வைக்கக்கோரி கலெக்டரிடம் மனு
ADDED : செப் 30, 2025 01:13 AM
நாமக்கல், 'முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்து தேர்வை, ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தியிடம், பட்டதாரி ஆசிரியர் தேர்வெழுதும் தேர்வர்கள் மனு அளித்தனர்
அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படுகிறது. இந்தாண்டு வரும் அக்., 12ல், 1,996 முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வை, 2 லட்சத்து, 36,390 பேர் எழுத உள்ளனர்.
ஆனால், ஆக., 18ல் பாடத்திட்டம் அதிகரிப்பு, புதிய நடைமுறை காரணமாக போதுமான கால அவகாசமின்றி, முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். தேர்வர்களின் நலன் கருதி, நவ., மாதத்திற்கு தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கோரிக்கை மனு அனுப்பி இருந்தோம். எந்த நடவடிக்கையும் இல்லை. வேறு வழியின்றி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தோம். உயர்நீதிமன்றமும் இதை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
இதற்கிடையே, திண்டுக்கல், வத்தலகுண்டு- பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் என்ற முதுகலை பட்டதாரி இளைஞர், தேர்வில் வெற்றிபெற முடியுமா என்ற பயத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள், எந்த அளவுக்கு மன உளைச்சலில் இருக்கின்றனர் என்பதற்கு, இந்த ஒரு உதாரணமே சாட்சி. இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு, கால அவகாசம் வழங்கி, தேர்வு தேதியை மாற்றம் செய்து அறிவிக்க பரிந்துரைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.