/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
செங்கல் சூளையை தொடர்ந்து நடத்த அனுமதி கோரி கலெக்டரிடம் மனு
/
செங்கல் சூளையை தொடர்ந்து நடத்த அனுமதி கோரி கலெக்டரிடம் மனு
செங்கல் சூளையை தொடர்ந்து நடத்த அனுமதி கோரி கலெக்டரிடம் மனு
செங்கல் சூளையை தொடர்ந்து நடத்த அனுமதி கோரி கலெக்டரிடம் மனு
ADDED : டிச 17, 2024 01:45 AM
நாமக்கல், டிச. 17-
'எங்களின் வாழ்வாதாரத்தை காக்க, செங்கல் சூளையை தொடர்ந்து நடத்த அனுமதி அளிக்க வேண்டும்' என, போடிநாயக்கன்பட்டியை சேர்ந்த கை செங்கல் சூளை உரிமையாளர்கள், நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
எருமப்பட்டி ஒன்றியத்தில் கை செங்கல் சூளை நடத்தி வருகிறோம். மாவட்ட நிர்வாகம், கை செங்கல் சூளை மூலம் காற்று மாசுபடுகிறது எனக்கூறி, 'செங்கல் தொழிலை நடத்தக்கூடாது, இரண்டு மாதத்திற்குள் அனைத்து கை செங்கல் சூளைகளும் நிரந்தரமாக மூடவேண்டும்' என தெரிவித்துள்ளது. சூளையில் செங்கல் எரிப்பதற்கு, விறகு மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். இவற்றில் எந்த பிளாஸ்டிக், கெமிக்கல் பொருட்கள் எதுவும் பயன்படுத்துவதில்லை.
அதனால், காற்று மாசுபடாது என தெரிவித்துக்கொள்கிறோம். கை செங்கல் சூளையை வாழ்வாதாரமாக கொண்டு, நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகிறது. தற்போது, அனைத்து செங்கல் சூளைகளையும் நிறுத்தும் நிலையில், எங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயம் உள்ளது. அதனால், செங்கல் சூளையை தொடர்ந்து நடத்த அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

