/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வாரச்சந்தையில் சுங்க கட்டணத்தை குறைக்கக்கோரி கலெக்டரிடம் மனு
/
வாரச்சந்தையில் சுங்க கட்டணத்தை குறைக்கக்கோரி கலெக்டரிடம் மனு
வாரச்சந்தையில் சுங்க கட்டணத்தை குறைக்கக்கோரி கலெக்டரிடம் மனு
வாரச்சந்தையில் சுங்க கட்டணத்தை குறைக்கக்கோரி கலெக்டரிடம் மனு
ADDED : மே 31, 2025 06:41 AM
நாமக்கல்: ப.வேலுார் வாரச்சந்தையில், விவசாயிகள், வியாபாரிகள் கொண்டுவரும் விளைபொருட்களுக்கு கூடுதலாக சுங்க கட்டணம் வசூலிப்பதை தடுக்கக்கோரி, இளம் விவசாயிகள் சங்கத்தினர் நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: ப.வேலுார் டவுன் பஞ்., ஞாயிறு வாரச்சந்தையில் விவசாயிகள், வியாபாரிகள் கொண்டுவரும் விளைபொருட்களுக்கு, சுங்க கட்டணம் வசூலிக்கும் உரிமம் ஏலம் எடுத்தவரால், எட்டு மாதங்களுக்குள் புதிய சுங்க கட்டணம் வசூல் செய்ய விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது விலை நிர்ணயம் செய்த தொகை, முந்தைய தொகையை விட பல மடங்கு அதிகம். கடை ஒன்றுக்கு, 100 ரூபாய் முதல், 200 ரூபாய் வரை சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.எனவே, விவசாயிகளின் நலன் கருதி மாவட்ட கலெக்டர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.