/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாநகராட்சியுடன் இணைக்காமல் ஊரக பகுதியாக தொடர அனுமதி அளிக்க கோரி கவர்னருக்கு மனு
/
மாநகராட்சியுடன் இணைக்காமல் ஊரக பகுதியாக தொடர அனுமதி அளிக்க கோரி கவர்னருக்கு மனு
மாநகராட்சியுடன் இணைக்காமல் ஊரக பகுதியாக தொடர அனுமதி அளிக்க கோரி கவர்னருக்கு மனு
மாநகராட்சியுடன் இணைக்காமல் ஊரக பகுதியாக தொடர அனுமதி அளிக்க கோரி கவர்னருக்கு மனு
ADDED : ஜன 21, 2025 06:35 AM
நாமக்கல்: 'சாலப்பாளையம், சின்ன பெருமாப்பட்டி குக்கிராம மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, நாமக்கல் மாநகராட்சி-யுடன் சேர்க்காமல், ஊரக பகுதியாகவே தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக கவர்னர்
ரவிக்கு, அப்பகுதி மக்கள் மனு அளித்துள்ளனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:நாமக்கல் நகராட்சி, தி.மு.க., அரசால் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதியாக எங்களது ரெட்டிப்-பட்டி கிராம பஞ்.,ம் இணைக்கப்பட்டுள்ளது. நாங்கள் வசிக்கும் சாலப்பாளையம், சின்னபெருமாப்பட்டி
குக்கிராமமானது, 300 சிறு, குறு விவசாய குடும்பங்கள் மற்றும் விவசாயம் சார்ந்த வேலைகள் செய்யும் குடும்பங்களை கொண்டுள்ள ஒருங்கி-ணைந்த கிராமம். எங்களின் விவசாய நிலம், அருகில் உள்ள பழையபாளையம்
அக்ரஹாரத்தில், 250 ஏக்கர் நன்செய் நிலமும், பெருமாப்பட்டி கீழ்முகம் கிராமத்தில், 200 ஏக்கர் நன்செய், புன்செய் நிலங்கள் உள்ளன.மேற்கண்ட இரண்டு கிராமங்களும், தனித்தனி பஞ்., ஆக உள்-ளது. எங்கள் கிராமங்கள் மாநகராட்சியுடன் இணையும் பட்-சத்தில், சொத்து வரி மற்றும் இதர வரிகள் அதிகமாவதோடு, விவ-சாயத்திற்கு தேவையான, 100 நாள்
வேலை திட்டமும் எங்க-ளுக்கு கிடைக்காமல் போகும். இவற்றை நம்பி உள்ள பல குடும்-பங்களின் வாழ்வாதாரத்திற்கும் மிகுந்த கஷ்டமும், நஷ்டமும் ஏற்-படும். எங்கள் கிராமம், நாமக்கல் - துறையூர் சாலையில், 2 கி.மீ.,
துாரத்தில் உள்ளது. சரியான பஸ் வசதியும் இல்லை. தனி அலுவலரை நியமித்து, கிராமத்தை குறித்து போதிய தகவல்களை திரட்டி, அதன் அடிப்படையில் மாநகராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ரெட்டிப்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட
சாலப்பாளையம், சின்னபெருமாப்பட்டி கிராம பொதுமக்களின் எதிர்-கால வாழ்வாதாரத்தையும், நலனையும் கருத்தில் கொண்டு, மாநக-ராட்சியுடன் இணைக்காமல், ஊரகப்பகுதியாகவே செயல்பட நட-வடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

