ADDED : ஜூலை 04, 2025 01:19 AM
நாமக்கல், தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில், நாமக்கல் மாவட்ட உடற் கல்வித்துறை ஆலோசனை கூட்டம் நாமக்கல்லில் நடந்தது.
நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை வகித்து பேசுகையில்,''நாமக்கல் மாவட்டத்தில் கடந்தாண்டு மாநிலம் மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் மாணவ, மாணவியர் 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, சிறப்பிடம் பெற்று வெற்றி பெற்றனர்.
அதேபோல இந்த கல்வியாண்டில் இன்னும் அதிக மாணவ, மாணவியரை விளையாட்டு போட்டிகளில் ஈடுபட வைக்க வேண்டும்,''என்றார்.சிறப்பாளர்களாக கல்வியாளர்கள் விமல் நிஷாந்த், பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் காந்திமதி, உடற்கல்வி பணிகள் குறித்து பேசினார். அரசு மற்றும் தனியார் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள், உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் பங்கேற்றனனர்.