/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வெண்ணந்துாரில் விற்பனைக்கு குவிந்த வெள்ளை பூசணி
/
வெண்ணந்துாரில் விற்பனைக்கு குவிந்த வெள்ளை பூசணி
ADDED : அக் 10, 2024 01:38 AM
வெண்ணந்துாரில்
விற்பனைக்கு குவிந்த வெள்ளை பூசணி
வெண்ணந்துார், அக். 10-
ஆயுத பூஜையை முன்னிட்டு, வெண்ணந்துாரில் வெள்ளை பூசணிக்காய்களை வியாபாரிகள் விற்பனைக்கு குவித்து வைத்துள்ளனர்.
ஹிந்துக்களின் முக்கிய பண்டிகையான ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை வரும், 11, 12ல் கொண்டாடப்படுகிறது. அப்போது, வர்த்தக நிறுவனங்கள், வீடுகளில் திருஷ்டி பரிகாரத்துக்காக நீர்ப்பூசணி என்றழைக்கப்படும் வெள்ளை பூசணியை பயன்படுத்துவது வழக்கம்.
இந்நிலையில், வெண்ணந்துார் பஸ் ஸ்டாப் அருகே உள்ள காமராஜர் சிலை பகுதியில் இயங்கி வரும் தினசரி மார்க்கெட்டில், வெள்ளை பூசணியை வியாபாரிகள் அதிகளவில் விற்பனைக்கு குவித்துள்ளனர். வெண்ணந்துார் பகுதியில் வெள்ளை பூசணி சாகுபடி அதிகளவில் இல்லை. இதனால், சேலம், நாமக்கல், ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஒரு கிலோ, 20 முதல், 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.