/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாரியம்மன் பண்டிகையையொட்டி தெப்பக்குளத்தில் கம்பம் விடும் விழா
/
மாரியம்மன் பண்டிகையையொட்டி தெப்பக்குளத்தில் கம்பம் விடும் விழா
மாரியம்மன் பண்டிகையையொட்டி தெப்பக்குளத்தில் கம்பம் விடும் விழா
மாரியம்மன் பண்டிகையையொட்டி தெப்பக்குளத்தில் கம்பம் விடும் விழா
ADDED : நவ 09, 2025 03:26 AM
திருச்செங்கோடு: திருச்செங்கோடு மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த அக்., 28ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. அன்று முதல் அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, பொங்கல், மாவிளக்கு வழிபாடு நடந்-தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பக்குளத்தில் கம்பம் விடும் விழா, நேற்று நடந்தது.
இதில், பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், அழகுமுத்து மாரியம்மன் உள்ளிட்ட, 25க்கும் மேற்பட்ட மாரியம்மன் கோவில்களில் வைக்கப்பட்டிருந்த கும்பம் மற்றும் கம்பங்கள், நேற்று காலை எடுக்கப்பட்டு முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக எடுத்து வந்து, ஈரோடு சாலையில் உள்ள தெப்பக்குளத்தில் விடப்-பட்டது.பக்தர்கள், கம்பம், கும்பம் மீது உப்பு, மிளகு துாவியும், முளைப்-பாரி, மாவிளக்கு எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கம்பம் விடும் நிகழ்வில் ஏராளமானோர் கலந்துகொண்டு பக்தி பரவசத்துடன் அம்மனை வழிபட்டனர். விழாவில், சிலம்-பாட்டம், சுருள் கத்தி, இரட்டை சில்தா, மான் கொம்பு உள்-ளிட்ட பல்வேறு பாரம்பரிய சிலம்ப கலைகளை பொதுமக்க-ளுக்கு செய்து காட்டினர். புலியோடு சண்டையிடும் காட்சிகள், தடி, சுருள் கம்பி, மான் கொம்பு ஆகியவற்றை வைத்து சண்டை-யிடும் காட்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தது. கம்பம் விடும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

