/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'இயற்கை பாதுகாப்பில் முன்னோடி' விருது:தகுதியானோர் விண்ணப்பிக்க அழைப்பு
/
'இயற்கை பாதுகாப்பில் முன்னோடி' விருது:தகுதியானோர் விண்ணப்பிக்க அழைப்பு
'இயற்கை பாதுகாப்பில் முன்னோடி' விருது:தகுதியானோர் விண்ணப்பிக்க அழைப்பு
'இயற்கை பாதுகாப்பில் முன்னோடி' விருது:தகுதியானோர் விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : செப் 28, 2025 01:53 AM
நாமக்கல்:'வனத்துறை மூலம் இயற்கை பாதுகாப்பில் முன்னோடி விருது பெற விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது' என, நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:'இயற்கை பாதுகாப்பிற்கு மரக்கன்றுகள் நடுதல், மருத்துவ தாவரங்கள் வளர்ப்பதை ஊக்குவித்தல், வன விலங்குகளை பாதுகாத்தல், இயற்கை சார்ந்த விழிப்புணர்வு முயற்சிகளை மேற்கொள்ளுதல் போன்ற பணிகளில், தன்னார்வத்துடன் ஈடுபடும் நபர்கள் அடையாளம் கண்டு அங்கீகரிக்கப்படுவார்கள்' என, சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. இதனடிப்படையில், சிறப்பு பங்களிப்பு செய்த நபர்களுக்கு மாநில அளவில், 100 பேருக்கு விருது வழங்கப்படுகிறது. வன உயிரினங்களின் வாழ்விடங்களை மீட்டெடுக்கும், மேம்படுத்தும் முயற்சிகள், வனவிலங்குகளை மீட்டெடுத்தல் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுதல்.
மனித-வள உயிரின மோதல்களை குறைக்கும் உதவிகள், வனங்கள் மற்றும் வன உயிரினங்கள் சார்ந்த குற்றங்கள் குறித்து தகவல் வழங்குதல், பொதுமக்களை வன உயிரினங்களின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தல்.
வன உயிரினங்களின் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தல், பிற பாதுகாப்பு முயற்சிகள் தகுதி, தன்னார்வமாக மற்றும் தலைமை பண்புடன் பணி செய்த நபர்கள், தமிழகத்தை இருப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதை கடந்தவராகவும் குறைந்தது, மூன்றாண்டுகள் தொடர்ச்சியாக வன உயிரின பாதுகாப்பு பணி மேற்கொண்டவராகவும் இருக்க வேண்டும்.
ஒரு நபர், ஏதேனும் ஒரு மாவட்டத்திற்கு மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். நேரடி வனம் மற்றும் வன உயிரின பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் இப்பணிகளுக்காக கடந்த, ஐந்தாண்டுகளில் விருது பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
தனிநபர் அல்லது வேறொரு நபர் மூலம் பரிந்துரை செய்து வனத்துறை இணையதள முகவரி https.//www.forests.tn.gov.in மூலமாகவோ, சம்பந்தப்பட்ட மாவட்ட வன அலுவலரிடம் நேரடியாகவோ, உரிய படிவத்தில் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். விபரங்களுக்கு, -9003157752- என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.