/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரூ.45.60 லட்சத்தில் திட்டப்பணி மாஜி அமைச்சர் துவக்கம்
/
ரூ.45.60 லட்சத்தில் திட்டப்பணி மாஜி அமைச்சர் துவக்கம்
ரூ.45.60 லட்சத்தில் திட்டப்பணி மாஜி அமைச்சர் துவக்கம்
ரூ.45.60 லட்சத்தில் திட்டப்பணி மாஜி அமைச்சர் துவக்கம்
ADDED : பிப் 09, 2025 07:03 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் நகராட்சியில், சட்டசபை உறுப்பினர் நிதியில் இருந்து, பெரியார் நகர் பகுதியில், 22.50 லட்சம் ரூபாயில் வடிகால் வசதியுடன் கூடிய சாலை, ஆவாரங்காடு அரசு பள்ளி வளாகத்தில், 13.5 லட்சம் ரூபாயில் அங்கன்வாடி பள்ளி கட்டடம், ஓம்சக்தி கோவில் அருகே, 8 லட்சம் ரூபாயில், சாலைப்பணி, 45.60 லட்சம் ரூபாயில், முடிக்கப்பட்ட திட்டப்பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு, நேற்று முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.,வுமான தங்கமணி திறந்து வைத்தார்.
மேலும், ஆவாரங்காடு ரேஷன் கடை அருகே, 19.80 லட்சம் ரூபாயில், சாலை வடிகால் பணி, அக்ரஹாரம் பள்ளி வளாகத்தில், 14.80 லட்சம் ரூபாயில் அங்கன்வாடி, குளத்துக்காடு மூன்றாவது வீதியில், குடிநீர் தேவைக்காக, 1.60 லட்சம் ரூபாயில் சிறு குடிநீர் தொட்டி. மேலும், குளத்துக்காடு, 6வது வீதியில், 1.60 லட்சம் ரூபாயில் சிறு குடிநீர் தொட்டி ஆகிய திட்டப்பணிகளுக்கு பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார்.பள்ளிப்பாளையம் நகர அ.தி.மு.க., செயலாளர் வெள்ளியங்கிரி, நகர பேரவை செயலாளர் சுப்பிரமணி, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.