/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கடைகளில் பிளாஸ்டிக் கவர் நகராட்சி பணியாளர்கள் ஆய்வு
/
கடைகளில் பிளாஸ்டிக் கவர் நகராட்சி பணியாளர்கள் ஆய்வு
கடைகளில் பிளாஸ்டிக் கவர் நகராட்சி பணியாளர்கள் ஆய்வு
கடைகளில் பிளாஸ்டிக் கவர் நகராட்சி பணியாளர்கள் ஆய்வு
ADDED : செப் 20, 2024 02:40 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் நகராட்சி பகுதியில் உள்ள கடைகள், பேக்கரிகளில் பிளாஸ்டிக் கவர் பயன்பாடு குறித்து நகராட்சி பணியாளர்கள் ஆய்வு செய்தனர்.
பள்ளிப்பாளையம் நகராட்சி பகுதியில் கடைகள், பேக்கரி, இறைச்சி கடைகள், தள்ளுவண்டி கடை மற்றும் பல இடங்களில் பிளாஸ்டிக் கவர் பயன்பாடு அதிகரித்து விட்டது. இதனால் வடிகால்,
திறந்தவெளியில் பிளாஸ்டிக் கவர்கள் குவிந்துள்ளன. நேற்று முன்தினம் இரவு சந்தைபேட்டை பகுதியில் காய்கறி சந்தை கூடியது, சந்தையில் நகராட்சி பணியாளர்கள் ஆய்வு செய்து பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்து, சம்மந்தப்பட்ட வியாபாரிகளுக்கு அபராதம் விதித்தனர்.
இதையடுத்து, நேற்று காலை முதல் நகராட்சி பணியாளர்கள், கடைகள், பேக்கரிகளில் ஆய்வு செய்தனர். இதில், இரண்டு கிலோ பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தடையை மீறி பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கடை உரிமையாளர்களை நகராட்சி பணியாளர்கள் எச்சரித்தனர்.