/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
/
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : செப் 28, 2025 01:56 AM
குமாரபாளையம்:குமாரபாளையத்தில், மாவட்ட மாசு கட்டுப்பாட்டு துறை, அரசு கலை அறிவியல் கல்லுாரி மற்றும் தனியார் கல்லுாரி சார்பில், 'நெகிழி இல்லா நாமக்கல் மாவட்டம்' எனும் தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட கலெக்டர் துர்கா மூர்த்தி, பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். முக்கிய சாலை வழியாக சென்ற பேரணி, ஆனங்கூர் பிரிவு சாலையில் நிறைவடைந்தது.
தொடர்ந்து, காவிரி கரையோர பகுதியில் கலெக்டர் துர்கா மூர்த்தி, மரக்கன்றுகள் நட்டு, 'மாஸ் கிளீன்' பணியை துவக்கி வைத்தார். அவர், ''துாய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி பயில அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்படும்,'' எனக்கூறினார். நகராட்சி கமிஷனர் ரமேஷ், மாவட்ட மாசு கட்டுப்பாட்டு துறை அலுவலர் செல்வகணபதி, சமூக ஆர்வலர், கவுன்சிலர்கள், மகளிர் குழுவினர் உள்பட பலர் பங்கேற்றனர்.
* மோகனுார் தேர்வுநிலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், நெகிழி பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்கும் வகையில், நெகிழி விழிப்புணர்வு முகாம், நேற்று நடந்தது. டவுன் பஞ்., தலைவர் வனிதா தலைமை வகித்து பேரணியை தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் சரவணகுமார், செயல் அலுவலர் கலைராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக, நெகிழியை பயன்படுத்த மாட்டோம்; நெகிழியை ஒழிப்போம், நெகிழி இல்லா டவுன் பஞ்சாயத்தாக மாற்றுவோம் என, துாய்மை பணியாளர்கள், அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்.