/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பிளாஸ்டிக் பறிமுதல்: ரூ.12,500 அபராதம்
/
பிளாஸ்டிக் பறிமுதல்: ரூ.12,500 அபராதம்
ADDED : நவ 14, 2024 07:21 AM
ப.வேலுார்: பரமத்தி பகுதிகளில், நுாற்றுக்கும் மேற்பட்ட வணிக நிறுவ-னங்கள் உள்ளன. இதில், ஹோட்டல், துரித உணவு கடைகள், டீக்-கடை, குளிர்பான கடை, மளிகை, பேக்கரி உள்ளிட்ட கடைகள் அடங்கும். மேற்கண்ட கடைகளில், தமிழக அரசால் தடை செய்-யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பது மற்றும் பயன்படுத்து-வதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துசாமி, பரமத்தி டவுன் பஞ்., செயல் அலுவலர் சுப்பிரமணி ஆகியோர் தலை-மையில், டவுன் பஞ்., பகுதி கடைகளில் ஆய்வு மேற்கொண்-டனர். அதில் தடை செய்யப்பட்ட
பிளாஸ்டிக் பொருட்கள் பயன்-படுத்துவது, விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம், 20 கடைகளுக்கு, 12,500 ரூபாய் அபராதம் விதிக்கப்-பட்டது மேலும், 20 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குட்கா விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்-படும் என, செயலர் அலுவலர் சுப்பிரமணி மற்றும் உணவு பாது-காப்பு அலுவலர் முத்தசாமி ஆகியோர் எச்சரிக்கை
விடுத்தனர்.