/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கிரிக்கெட் போட்டிக்கு வரும் 27ல் வீரர்கள் தேர்வு
/
கிரிக்கெட் போட்டிக்கு வரும் 27ல் வீரர்கள் தேர்வு
ADDED : ஜூலை 15, 2025 01:24 AM
பள்ளிப்பாளையம், ''பள்ளிப்பாளையம் அருகே, எஸ்.பி.பி., காலனி விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் போட்டிக்கு, வரும், 27ல் வீரர்கள் தேர்வு முகாம் நடக்கிறது,'' என, நாமக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் சுப்பிரமணியம் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும், மாவட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி
க்கு வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறது. நாமக்கல் மாவட்ட அணிக்காக, 25 வயதுக்குட்பட்ட, வீரர்களுக்கான தேர்வு, 27 காலை, 6:30 மணிக்கு, பள்ளிப்பாளையம் அருகே உள்ள எஸ்.பி.பி., காலனி விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது. இப்போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்கள், 2000 செப்., 1க்கு பின்னர் பிறந்திருக்க வேண்டும். கலந்துகொள்ளும் வீரர்கள், பிறப்பு சான்றிதழ், ஆதார் அட்டையுடன், வெள்ளை சீருடை, விளையாட்டு உபகரணங்களுடன் வர வேண்டும். இந்த வாய்ப்பை தகுதியுள்ள கிரிக்கெட் வீரர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

