நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்செங்கோடு: திருச்செங்கோடு, எட்டிமடைபுதுாரில் உள்ள தேவி கருமாரி-யம்மன் கோவில் திருவிழா, கடந்த, 1ல் தேதி கம்பம் நடுதலுடன் தொடங்கியது.
11ல் பங்குனி உத்திரத்தையொட்டி, காவடி எடுத்தல், காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்துக்கொண்டு, ஆபத்து காத்த விநாயகர் கோவில் இருந்து ஊர்வலமாக கோவி-லுக்கு புறப்படுதல், மாலை அக்னிகரகம், அலகு குத்துதல், தேவி கருமாரியம்மன் உற்சவர் திருவீதி உலா நடந்தது.நேற்ற்று முக்கிய நிகழ்வான தெப்பக்குளத்தில் கம்பம் விடும் நிகழ்ச்சி நடந்தது. கோவிலில் இருந்து கம்பம் எடுத்து, பக்தவச்-சலம் நகர், எஸ்.என்.டி., ரோடு, பெரிய மாரியம்மன் கோவில் வீதி, கிழக்குரத வீதி, தெற்கு ரத வீதி, ஈரேடு ரோடு பெரிய தெப்-பக்குளத்தில் கம்பம் விடப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.